செல்போன் பறித்த சிறுவன் கைது
2019-11-08@ 00:11:31

சென்னை: கல்லூரி மாணவனிடம் செல்போன் பறித்த சிறுவனை போலீசார் கைது ெசய்தனர்.சென்னை பட்டாளம், மசூதி 1வது தெருவை சேர்ந்தவர் முகமது இர்பான் (20), இவர், சென்னை அருகே உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர், கடந்த 2ம் தேதி காலை 6 மணிக்கு டவுட்டன் பாலம் அருகே கல்லூரி பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது சிறுவன் ஒருவன், இர்பான் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினான்.
இதுகுறித்து முகமது இர்பான் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், பெரியமேடு பகுதியை ேசர்ந்த 17 வயது சிறுவன், செல்போன் பறித்து சென்றது தெரிந்தது. அதை தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
25 சண்டை கோழிகள் திருட்டு
அம்மன் தாலி திருட்டு
அதிகாரி வீட்டில் கொள்ளை
வீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்
போரூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர் கைது
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவன் கைது
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்