SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீன ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் இந்திய இணை

2019-11-08@ 00:10:13

புஸோ: சீன ஓபன் ேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ெரங்கி ரெட்டி-சீராக்  ஷெட்டி இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட உலக சாம்பியன் பி.வி.சிந்து, சாய்னா  முதல் சுற்றிலேயே ெவளியேறி விட்டனர். இந்நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரெங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி நுழைந்து அசத்தியது.  நேற்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்த இணை, ஜப்பானின் ஹீரோயூகி எண்டோ, யுடா வாடநபே இணையுடன் மோதியது.  அதில் முதல் செட்டை இந்திய இணை 21-18 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து 2வது செட்டை ஜப்பான் இணை 23-21 என்ற புள்ளி கணக்கில் போராடி வென்றது. கடைசி செட்டில் மீண்டும் வேகம் காட்டிய இந்திய இணை 21-11 என்ற புள்ளி கணக்கில் கைபற்றியது. அதனால் ரெங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சாத்விக்சாய்ராஜ் ரெங்கி ரெட்டி இணை கொரியாவின்  சியோ  செயங், சே யுஜங் இணையிடம் 23-31, 21--16 என நேர் செட்களில் தோற்று ஏமாற்றம் அளித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் 2வது சுற்றில் 0-2 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் விக்டர் அக்செலனிடம் தோற்றார். அதேபோல் இந்தியாவின் சாய் பிரனீத் 1-2 என்ற செட்களில் டென்மார்க்கின் அண்டெர்ஸ் ஆன்டோன்செனிடம் தோல்வி அடைந்தார்.

ஐபிஎல் போட்டியில் தேசிய கீதம்
ஐபிஎல் தொடரில் பெரிதாக  சாதிக்காத அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உள்ளது. அஸ்வின் தலைமையில்தான் போன சீசனில் கொஞ்சம் கவனிக்கப்படும் அணியாக மாறியது. அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்குள் பஞ்சாப் அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று தகவலகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் அணி, ‘ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு தேசியகீதம் பாட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) கடிதம் எழுதியுள்ளது.

ஒலி. மேரி கோம் நன்றி
இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்  உலக ஓலிம்பியன்கள்(ஒலிம்பிக் வீரர்கள்) சங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். காரணம்  மேரி கோம் தனது பெயருக்கு முன்னாள் ஒலி(ம்பியன்) என்று போட்டுக்ெகாள்ள நேற்று நடைபெற்ற  ஓலிம்பியன்கள் சங்க கூட்டத்தில் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வென்ற வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே இப்படி பெயருக்கு முன்னாள் ‘ஒலி’ என்று குறிப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது.

உலககோப்பை அணியில் இடம்
தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கூடவே அணியை இறுதிப் போட்டி வரை கொண்டுச் சென்றார். டோனி இடத்தை ஈடு செய்யும் வகையில் திறமையான, அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனவே நல்ல ஆட்டத்திறனில் இருக்கும் தினேஷ் கார்த்திகிற்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால்  ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். விரைவில் நடைபெற உள்ள சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான டி20 போட்டியிலும் அவர் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்