SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் சக்கர நாற்காலி!!

2019-11-07@ 17:21:55

மாற்றுத்திறனாளிகள் நின்று கொண்டே பயன்படுத்தும் வகையிலான சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. நின்றவாறு பயணிக்க இது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாக மாற்றுதிறனாளிகள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் நடக்க இயலாத மாற்றுதிறனாளிகள் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனை அடிப்படையாக வைத்து சென்னை ஐஐடி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்கும் வகையிலான சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளனர். இதனை மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லோத் சென்னை தரமணியில் நடைபெற்ற‌ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் வடிவமைத்த சக்கர நாற்காலியை பீனிக்ஸ் ‌என்ற நிறுவனம் தயாரித்து பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.இது போன்ற வீல் சேர் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும் எப்போதும் அமர்ந்து கொண்டே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மாற்றுதிறனாளிகள் கூறுகின்றனர்.

மேலும், 'குறைந்த விலையில் வீல் சேர் கிடைக்கிறது. வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ரொம்ப பயனுள்ளதாக வீல் சேர் வடிவமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கின்றனர்.மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் நோக்கில் இதனை உருவாக்கி இருப்பதாகவும், பல கட்ட சோதனைகளுக்கு பிறகு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் பீனிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சக்கர நாற்காலியை மானிய விலையில் ‌பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லோத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaiheavy29

    வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

  • carbomb28

    ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

  • molave28

    வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்