ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு
2019-11-07@ 10:26:18

ஏடன்: ஏமன் நாட்டின் அரசுப் படைகளுக்கு சொந்தமான ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். ஏமனில் கடலோரத்தில் மோச்சா நகரம் உள்ளது. ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் மோச்சா நகரில் உள்ள வெவ்வேறு ராணுவ தளங்கள் மீது 4 ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடந்தது. இதில் இரு ஏவுகணைகள் நாட்டின் உணவு பாதுகாப்பு குடோன்களின் மீது விழுந்தது.
இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவூதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த சண்டையால் அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் மோஷா நகரில் உள்ள அரசு படைகளுக்கு சொந்தமான ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஜெயன்ட்ஸ் பிரிகேடியர்ஸ் ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த ஆளில்லா விமான குடியிருப்புகள் மீது விழுந்தன. இதில் 4 பேர் பலியாகிவிட்டனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஏமன் நாட்டின் பதற்றம் நிலவுகிறது.
மேலும் செய்திகள்
உலகத்தை மிரட்டி வரும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு
ஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்எக்ஸ்
அதிகார மோதலின் உச்சகட்டம் : ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கம்
தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்!: நாவல்னி கைது சர்ச்சையில் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை..!!
சீன தங்க சுரங்க விபத்து!: 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு..!!
இங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா...! ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்