கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் கம்பெனி அதிகாரி பலி
2019-11-07@ 00:14:51

அம்பத்தூர் : அம்பத்தூர்-புழல் புறவழிச்சாலை, கள்ளிக்குப்பம் பகுதியில் தறிகெட்டு ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் தனியார் கம்பெனி அதிகாரி பலியானார். மேலும், அவரது 2 நண்பர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை திருவேற்காடு, வடநூம்பல் மெயின்ரோட்டை சேர்ந்தவர் லோகராஜ் (34). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன அதிகாரி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. லோகராஜ் தனது நண்பர்களான பம்மல் ஸ்ரீராம் (24), குரோம்பேட்டை சத்யபிரகாஷ் (32) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
அம்பத்தூர்-புழல் புறவழிச்சாலை, கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே அதிகாலை 3 மணியளவில் சென்றபோது திடீரென தறிகெட்டு ஓடிய கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில், கார் அப்பளம்போல் நொறுங்கியதில் மூவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லோகராஜ் இறந்ததாக தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த ஸ்ரீராம், சத்யபிரகாஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கார் கவிழ்ந்து தனியார் கம்பெனி அதிகாரி பலியான சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.32 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
பைக் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை: ஆவடி அருகே பரிதாபம்
கணவர் சந்தேகப்பட்டதால் நடிகை சித்ரா தற்கொலை: நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் கோவில் சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.. எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன?.. ஐகோர்ட் கேள்வி
உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை சட்டமன்ற தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
விபத்து நேரிட்டால் யார் பொறுப்பு?: செங்கல்பட்டில் முதல்வரை வரவேற்று நெடுஞ்சாலையில் அ.தி.மு.க பேனர்கள்..!!
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!