SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளை கண்டுபிடிப்பு

2019-11-06@ 15:14:41

சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இது தான் மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர். உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரியனுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரியனுடன் ஒப்பிடுகையில் 4000 கோடி மடங்கு பெரியது தொடங்கி குறைந்தது 5 முதல் 15 மடங்கு பெரிய கருந்துகளைகளை இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், சூரியனை விட 3.3 மடங்கு மட்டுமே அளவில் பெரிய கருந்துளையை ஓகியோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன் சூரியனை விட 3.8 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நியூட்ரான் நட்சத்திரத்திற்கு இவ்வளவு பெரிய நிறை இல்லாத போது, இந்த சிறிய கருந்துளை உண்டானது எப்படி என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்வியானது நட்சத்திரங்களின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய மறுவரையறைக்கு வழிவகுத்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்