SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்லிம்போன்

2019-11-06@ 14:16:55

நன்றி குங்குமம் முத்தாரம்

ஹூவாய் நிறுவனத்தின் சப்-பிராண்ட் ‘ஹானர்’. கடந்த ஒரு வருடமாகவே கேட்ஜெட்ஸ் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாடல் ‘ஹானர் 20 லைட்’. அவ்வப்போது இந்த மாடலில் உள்ள அம்சங்கள் வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்பை எகிறச் செய்தது.  கடைசியில் சீனாவில் இந்த போன் அறிமுகமாகி பலரின் பாராட்டுகளைக் குவித்து வருகி றது. சீனாவுக்கு என்று பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதை ‘ஹானர் 20 லைட் சீனா’ என்றும் அழைக்கின்றனர். இதில் அப்படி என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்ப தைப் பார்ப்போம். ஸ்லிம்மான இதன் வடிவ மைப்பு வாங்கத் தூண்டுகிறது. 6.30 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டி- OLED டிஸ்பிளே ஆயிரக்கணக்கான வண்ணங்களைத் துல்லியமாக பிரித்து காண்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது.

1080 X 2400 பிக்ஸல் ரெசல்யூசன், 4ஜிபி, 6ஜிபி, 8 ஜிபி என மூன்று ரேம்கள், 128 ஜிபி ஸ்டோரேஜ், 256 ஜிபி வரை ஸ்டோரேஜை நீட்டித்துக்கொள்ளும் வசதி,  48 எம்பியில் மெயின் கேமரா, 8 எம்பி, 2 எம்பியில் அடுத்தடுத்து கேமராக்கள் என்று மொத்தமாக மூன்று பின்புற கேமராக்கள், செல்ஃபி எடுக்க தனியாக 16 எம்பியில் ஒரு கேமரா, நாள் முழுக்க சார்ஜ் நிற்க 4000mAh பேட்டரி திறன் என கெத்து காட்டுகிறது இந்த போன். மற்ற நாடுகளில் வெளியாகப்போகும் இதே மாடலில் சில அம்சங்களில் மட்டும் மாற்றம் செய்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு செல்ஃபி கேமராவின் திறன் 32 எம்பி. விலை 14 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்