ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவன் இருப்பிடத்தை அடையாளம் காட்டிய மோப்ப நாயை கவுரவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
2019-10-31@ 17:46:11

நியூயார்க்: ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக்’ என்ற தனது அமைப்பின் பெயரை கடந்த 2013ம் ஆண்டு, ‘ஐஎஸ்ஐஎஸ்’ என மாற்றி கொண்டு, உலகையே அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவன் அபுபக்கர் அல் பாக்தாதி. சிரியாவின் முக்கிய பகுதிகளையும், ஈராக்கின் சில பகுதிகளையும் கைப்பற்றி வலம் வந்தான். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்த, பிணை கைதிகளை கழுத்தறுத்து கொல்வது, கொடூரமான முறையில் மரண தண்டனை, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற கொடூர தண்டனைகளை அளித்து, அவற்றை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிடுவதை அவன் வழக்கமாக கொண்டிருந்தான். தனக்கு எதிராக செயல்படும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை மிரட்டியும் ஆடியோ, ஆடியோ கேசட்டுகளை வெளியிடுவான்.
இந்நிலையில், ஐஎஸ் இயக்கத்தை அழிக்க அமெரிக்க அரசு தீவிரமாக களமிறங்கியது. இதை அறிந்த பாக்தாதி, கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தான். இவனை பற்றிய துப்பு கொடுத்தால் 177 கோடியே 50 லட்சம் சன்மானம் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கிடையே, சிரியாவில் பாக்தாதி தங்கியிருக்கும் இடம் குறித்த ரகசிய தகவலை ரகசிய உளவாளி ஒருவன் அமெரிக்காவுக்கு தெரிவித்தான். இதைத் தொடர்ந்து, மோப்ப நாயுடன் 8 ஹெலிகாப்டர்களில் சென்ற கே-9 அதிரடிப் படையினர், இட்லிப் மாகாணத்தில் பரிஷா கிராமத்தில் பதுங்கி இருந்த பாக்தாதியை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க, தனது 3 மகன்களுடன் ரகசிய குகைக்குள் ஓடிய பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாய் வேகமாக துரத்தி சுற்றி வளைத்தது. அதன் ஆக்ரோஷத்தையும், ஆவேசத்தையும் கண்ட பாக்தாதி, அதனிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்தான். மற்றொரு புறம், குகையும் அதற்கு மேல் செல்லவில்லை. அதோடு முடிந்திருந்தது. அமெரிக்க வீரர்களும் வேகமாக வந்தனர்.
இதனால், உயிர் பயத்தில் மகன்களை கட்டியணைத்தப்படி கதறி அழுத பாக்தாதி, அமெரிக்க வீரர்களிடம் சரணடைய விரும்பாமல் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். அதில், தனது 3 மகன்களையும் கொன்று விட்டு, தானும் உடல் சிதறி இறந்தான். பாக்தாதியின் உள்ளாடைகளை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தி இறந்தது அவன் தான் என்று அமெரிக்கா உறுதி செய்தது. அதன் பிறகே, அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை உலகிற்கு தெரியப்படுத்தினார். அதோடு, பாக்தாதியை ‘போட்டுக் கொடுத்த’ உளவாளிக்கும், ஏற்கனவே அறிவித்தப்படி 177 கோடியே 50 லட்சம் பரிசுப் பணத்தை அமெரிக்கா கொடுத்துள்ளது. ஆனால், அது யார் என்ற விவரத்தை அது வெளியிடவில்லை.
இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அல் பாக்தாதின் இருப்பிடத்தை அடையாளம் காட்டிய மோப்ப நாயை கவுரவிக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். வியாட்நாமில் அமெரிக்கா நடத்திய போரின்போது, சகவீரர்கள் 10 பேரை காப்பாற்றிய அமெரிக்க வீரர் ஜேம்ஸ் மெக்லோகனுக்கு Medal of Honor விருது வழங்கப்பட்டது. அந்த படத்தை ஃபோட்டோ ஷாப் செய்த டிரம்ப், மெக்லோகனுக்கு பதிலாக பக்தாதியை துரத்திய நாய் படத்தை வைத்து பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றினார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா
வழியனுப்பும் விழாவில் டிரம்ப் பிரார்த்தனை; கொரோனாவால் பலியான 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு அஞ்சலி: இன்றிரவு அதிபராக பதவியேற்கும் முன் ஜோ பிடன் உருக்கம்
அமெரிக்க சுகாதாரத்துறை துணை செயலாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை நியமனம் செய்தார் ஜோ பைடன்
கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷியா அறிவிப்பு : உலக நாடுகள் ஆச்சரியம்
வரும் காலங்களில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவாகும்!: அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ள பிளிங்கன் நம்பிக்கை..!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!