குழித்துறை நகராட்சி பகுதியில் அங்கன்வாடிகள் பராமரிக்கப்படுமா?...குழந்தைகளின் வருகை குறைந்தது
2019-10-30@ 20:18:10

மார்த்தாண்டம்: குழித்துறை நகராட்சியில் இடைத்தெரு, கழுவன்திட்டை, மார்த்தாண்டம் மார்க்கெட் அருகில், வெட்டுவெந்நி, பந்நியாணி என்று மொத்தம் 5 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களை நகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மேற்கூரைகள் உடைந்தும், சுவர்கள் விரிசல் விழுந்தும் காணப்படுகின்றன. கழிவறைகள் கூட அசுத்தமாக பாழடைந்த நிலையில் உள்ளன. வளாகம் முழுவதும் புதர்மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக விளங்கி வருகிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கழுவன்திட்டை, பந்நியாணி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் படுமோசமாக பழுதடைந்து காணப்படுகின்றன.
மழை நேரங்களில் மேற்கூரை ஓட்டை வழியாக ஒழுகும் தண்ணீர் குழந்தைகள் மீது பட்டு அவர்களுக்கு காய்ச்சல் உள்பட நோய்களையும் வரவழைத்து விடுகிறது. சரியான அடிப்படை வசதிகள் கூட இங்கு இல்லை. தற்போது அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளை அனுப்ப பலர் தயங்குகின்றனர். இதனால் நாளுக்கு நாள் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது விஷயத்தில் தனி கவனம் செலுத்தி அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
மேலும் செய்திகள்
இடைத்தேர்தல் சோதனை கெடுபிடிகள் பணம் கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கு ரசீது: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1.74 லட்சம் பறிமுதல்
பனி பாதி... மேகம் மீதி.... கொடைக்கானலில் பகலிலும் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் சிரமம்
தாராபுரம் அருகே மீண்டும் பரபரப்பு அமராவதி ஆற்றில் ராட்சத முதலை நடமாட்டம்
புதுச்சேரியில் பெண்கள் போலீசார் இடையே தள்ளு முள்ளு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு அணிவகுத்து செல்லும் பாதயாத்திரை பக்தர்கள்: பிப்.5ம் தேதி தைப்பூச திருவிழா
கைத்திறமையால் காசாகும் கழிவுப் பொருட்கள் வெளிநாடு செல்லும் பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்: நெல்லை அருகே சத்தமின்றி சாதிக்கும் மகளிர்கள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!