ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்ட சுஜித்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத எம்.பி. ஜோதிமணி
2019-10-29@ 11:29:23

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்ட சுஜித்தின் உடலை பார்த்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்ணீர் விட்டு அழுதார். மீட்பு பணிகள் நடக்கும் போது, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சுஜித்தின் அம்மாவுடன் இருந்தார். சுர்ஜித்தின் தாயார் முதல்நாள் வரும் போது, கையெடுத்து கும்பிட்டு சுஜித்தை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கேட்டார். ஒவ்வொரு நிமிடமும் தாமதமாகும்போது, வீட்டுக்குள் சென்று அவர்களை பார்ப்பதற்கு எனக்கு அச்சமாக இருந்தது என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவு சுஜித் உடல் மீட்கப்பட்ட போதும் கூட, ஜோதிமணி அங்குதான் இருந்தார். சுஜித் இறந்த செய்தி கேட்டு அங்கேயே நேற்று ஜோதிமணி உடைந்து அழுதார்.
சுஜித்தின் அம்மாவை தோளில் சாய்த்து ஜோதிமணி ஆறுதல் கூறினார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது. குழந்தை சுஜித் இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்து அழுகிய நிலையில் இருப்பதாக தெரிந்தது. இதனை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர்.
பின்னர் அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட பின்னர் சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, அவரது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் குழந்தை சுஜித்தின் உடல் ஆவாரம்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்
தமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்
மதுரையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி ‘க்யூ.ஆர் கோடை’ ஸ்கேன் செய்தால் மொய் பணம் அக்கவுன்ட்டில் ஏறும்
புதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்
கன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை சாவு
வேலூர் அருகே எருது விடும் விழா காளைகள் முட்டியதில் எஸ்ஐ, போலீஸ் உட்பட 21 பேர் படுகாயம்: பார்வையாளர்கள் மீது போலீஸ் தடியடி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்