SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்பித்து இருக்கின்றது : தெலங்கானா ஆளுநர் தமிழிசை வேதனை

2019-10-29@ 10:47:14

சென்னை : குழந்தை சுஜித் இழப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,' குழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்பித்து இருக்கின்றது. இனிமேல் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு நாம் அனைவருமே முயற்சி செய்ய வேண்டும். இந்த மரணம் சாதாரணமானது அல்ல.சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது. இருந்து. உலகிற்கு பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான். பிஞ்சு குழந்தையின் துடிதுடித்த மரணம் பலபேர் இருந்து போதித்த பாடங்களை விட இறந்து பல பாடங்களை போதித்து இருக்கின்றது. மீட்பதற்கு கடுமையான போராட்டங்கள் நடத்தி இருந்தாலும் உயிரோடு மீட்காதது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கின்றது. மீண்டு வரவேண்டுமென்ற பிரார்த்தனை பலிக்காமல் போய் விட்டது.இத்தகைய நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும்.' என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2021

    28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-02-2021

    27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-02-2021

    26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • modipuudddhh

    புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

  • maaaaaaaaa

    பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்