சென்னையில் 2வது விமான நிலையம் ஆய்வு பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்: 2 இடங்கள் தேர்வு
2019-10-29@ 01:03:04

சென்னை: சென்னை விமான நிலையத்தின் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளும் திறன் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் 2வது விமான நிலையத்தை அமைக்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னைக்கு அருகே புதிய விமான நிலையத்ைத அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. விமான நிலையம் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள இடங்களை தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதில், மாமண்டூருக்கும் செய்யூருக்கும் இடையில் உள்ள இடம், காஞ்சிபுரத்திற்கும் அரக்கோணத்துக்கும் இடையில் உள்ள பரந்தூர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்படலாம் என்று விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 1500 ஏக்கரில் இருந்து 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை. புதிய விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யுமாறு ஏற்கனவே தமிழக அரசுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. தற்போது கண்டறியப்பட்டுள்ள 2 இடங்களும் தமிழக அரசு சுட்டிக்காட்டிய இடமாகும்.
மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!!!
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!