SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரெஞ்ச் ஓபன் சிந்து அதிர்ச்சி தோல்வி

2019-10-27@ 00:09:34

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் உலக சாம்பியன் பி.வி.சிந்து (இந்தியா) அதிர்ச்சி தோல்வி அடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். கால் இறுதியில் தைவான் வீராங்கனை டாய் ட்ஸூ யிங்குடன் நேற்று மோதிய சிந்து 16-21, 26-24, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார். சென்னையில் இன்று மும்பையுடன் மோதல் வெற்றியை தொடங்குமா சென்னையின் எப்சிசென்னை: முதல் போட்டியில் தோல்வியடைந்த சென்னையின் எப்சி அணி இன்று உள்ளூர் ரசிகர்கள் முன்பாக மும்பை சிட்டி எப்சி அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 6வது சீசன் கடந்த 20ம் தேதி தொடங்கியது. சென்னையின் எப்சி அணி தனது முதல் போட்டியில் கோவா எப்சியுடன் மோதியது. அந்த போட்டியில் சென்னையின் எப்சி 0-3 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் தனது 2வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்சியுடன் இன்று மோத உள்ளது. உள்ளூரில் நடக்கும் முதல் போட்டியான இதில் வெற்றி பெற்று புள்ளிக் கணக்கை தொடங்க சென்னையின் எப்சி ஆர்வமாக உள்ளது. கடந்த 5வது சீசனில் கடைசி இடத்தை பிடித்ததால் இம்முறை ஏகப்பட்ட மாற்றங்களை செய்துள்ளது. ஆனாலும் முதல் போட்டியில் வெற்றி கிடைக்கவில்லை. அதனால் இருக்கும் வீரர்களில் மாற்றம் செய்து வெற்றியை வசப்படுத்த சென்னையின் எப்சி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில், ‘முதல் போட்டியின் முடிவை விட அடுத்த போட்டி குறித்துதான் நாங்கள் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்’ என்றார். முதல் போட்டியில் யெலி சபா, லுசியான் கோயன், ஜெர்ரி லாலரின்சுலா ஆகியோர் மட்டுமே சுமாராக விளையாடினர். மற்றவர்களின் ஆட்டம் எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும். எனேவே இன்று ஆடும் அணியில் மாற்றம் இருக்கும். முதல் போட்டியில் புதிதாக களம் கண்ட கோல்கீப்பர் விஷால் கெய்த்துக்கு இன்று ஓய்வு தரப்படலாம். எனவே அணியின் பழைய கோல்கீப்பர் கரண்ஜித் சிங் மீண்டும் களமிறக்கப்படலாம். தமிழக வீரர்கள் தனபால் கணேஷ், எட்வின் வென்ஸ்பால் இருவருக்கும் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. உள்ளூர் போட்டி என்பதால் இன்றும் களமிறக்கப்படலாம்.

வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் சென்னை அணியை மும்பை சிட்டி எப்சி எதிர்கொள்கிறது. தனது முதல் போட்டியில் கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய உற்சாகத்துடன் அந்த அணி களம் காண உள்ளது. இத்தனைக்கும் மும்பை அணியை விட கேரள அணிதான் சிறப்பாக விளையாடியது. ஆனாலும் கோல் அடித்தது மும்பையின் முன்கள ஆட்டக்காரர் அமைன் சேர்மிட்டிதான். அந்த அணியின் கோல் கீப்பர் அம்ரிந்தர் சிங் மட்டுமின்றி சர்தக் கோலி, சுபாஷிஷ் போஸ், ராவ்லின் போர்கெஸ் என பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே சென்னை அணி வெற்றிக்காக போராட வேண்டும். அதுமட்டுமல்ல கடைசியாக இந்த 2 அணிகளும் மோதிய 2 போட்டிகளிலும் மும்பை அணிதான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்