தென் மண்டல ஃபிஸ்ட்பால் தமிழ்நாடு அணிகள் சாம்பியன்
2019-10-27@ 00:07:50

சென்னை: தென் மண்டல அளவிலான முதலாவது தேசிய ஃபிஸ்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இதில் தென் மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபர், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் தமிழ்நாடு 11-8, 11-00 என்ற நேர் செட்களில் புதுச்சேரியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் பிரிவில் தெலுங்கானா 3வது இடத்தையும், கேரளா 4வது இடத்தையும் பிடித்தன.
பெண்கள் பிரிவுக்கான இறுதி போட்டியில் தமிழ்நாடு 8-11, 11-8, 11-8 என்ற செட்களில் புதுச்சேரியை போராடி வென்றது. இந்தப் பிரிவில் கேரளா 3வது இடத்தையும், தெலுங்கானா 4வது இடத்தையும் பெற்றன.சிறந்த வீராங்கனைக்கான விருது தமிழகத்தின் பியூலா ஜாய்ஸ், சிறந்த வீரருக்கான விருது கேரளாவின் சனால் ஆகியோர் பெற்றனர்.
மேலும் செய்திகள்
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஜோஸ் ஆலுக்காஸின் ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’
அகத்தீஸ்வரர் கோயில் நிலத்தை வைத்து வங்கியில் ரூ.69 கோடி கடன் பெற்றது எப்படி? அதிகாரிகள் விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்