சிட்லப்பாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் கணக்கில் வராத 15 லட்சம் சிக்கியது
2019-10-26@ 00:14:34

சென்னை: சிட்லப்பாக்கத்தில் உள்ள புனித தோமையார்மலை ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.15 லட்சம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் முதல் பிரதான சாலையில் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் கவுல்பஜார், திரிசூலம், திருவஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர், வேங்கைவாசல், மதுரைப்பாக்கம், மூவரசன்பட்டு, அகரம்தென், சித்தாலப்பாக்கம், நன்மங்கலம், பொழிச்சலூர் என 15 ஊராட்சிகள் செயல்படுகின்றன. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள கட்டிட அனுமதி சார்பான பணிகள், ஒன்றிய சாலை பணிகள், ஊரக வளர்ச்சி துறை சார்பான பணிகள், அங்கன்வாடி மையங்கள், தமிழக அரசு சமுதாய நலத்துறை நல உதவிகள், திருமண உதவி திட்டம், பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் இருந்து சிறப்பு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நேற்று மதியம் ஒன்றிய அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அலுவலகத்திற்கு வந்திருந்த 10க்கும் மேற்பட்ட ஊராட்சி அலுவலர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் மூன்று அதிகாரிகளின் அறைகளில் கணக்கில் வராத ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி சார்பில் கூறப்பட்டது. மேலும் அந்த பணம் குறித்தும், கணக்குகள் குறித்தும் விசாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதிமுக மாவட்ட செயலாளரின் பினாமி ஓட்டம்
சிட்லப்பாக்கத்தில் உள்ள புனித தோமையார்மலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் பினாமி மகேஷ் என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அலுவலகத்தில் நடைபெறும் எந்த பணிகளாக இருந்தாலும் இவர்கள் சொன்னால் மட்டுமே நடைபெறும் என்ற நிலை நீண்ட நாட்களாகவே நிலவுகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக 15 ஊராட்சிகளில் இருந்து வசூல் செய்யப்பட்ட பணத்தை சிட்லப்பாக்கம் ராஜேந்திரனிடம் ஒப்படைப்பதற்காக ஊராட்சி அதிகாரிகள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியிருக்கலாம் என ரகசிய தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒன்றிய அலுவலகத்தில் சோதனைக்காக வந்தபோது அவர்களை கண்ட மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. எனவே அங்கு பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பணம் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...! தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு
வேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!