சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
2019-10-25@ 14:36:29

சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் 2 நாட்களுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த குறிப்பன்குளத்தைச் சேர்ந்தவர் நாகலிங்கம். இவரும், இவரது மகன் ராஜேஷ் சர்மாவும் விவசாயிகள். கடந்த 2 நாட்களுக்கு முன் தோட்டத்திற்கு சென்ற ராஜேஷ் சர்மா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை நாகலிங்கம் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே மாயமான ராஜேஷ்சர்மா தோட்டத்தில் உள்ள கிணற்றில், சம்பவத்தன்று தவறி விழுந்ததும், மேலும் ஏற முடியாமலும் தவித்துவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாகலிங்கம் அளித்த தகவலையடுத்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தவித்து கொண்டிருந்த ராஜேஷ்சர்மாவை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் ராஜேஷ்சர்மா தவறி கிணற்றில் விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் குதித்தாரா என நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இதுவரை 5 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!!!!
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.!!!
தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து... சிவகாசியில் மீண்டும் ஒரு வெடி விபத்து..: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது; சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு
அரசு விழா,பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து: தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓட்டம்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்