ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
2019-10-23@ 12:15:55

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு
கடந்த 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவர் மீதும் சிபிஐ.யும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன்
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர் சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு
இதனிடையே சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரத்தால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது. எனவே, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 7 நாள் காவலில் தனது அலுவலகத்தில் வைத்து ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறை காவல் 24ல் முடியும் நிலையில், அன்றைய தினம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்க உள்ளது.
Tags:
ப.சிதம்பரம் வெளிநாடு பிணைத் தொகை சிபிஐ கைது ஜாமீன் நிபந்தனை உச்சநீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றம்மேலும் செய்திகள்
போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது யார்?.. டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு: அமித்ஷா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
நெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
மக்களை தியாகம் செய்ய வரவில்லை: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகல்.!!!
'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .
2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!