புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பாசிக் ஊழியர்கள் போராட்டம்
2019-10-23@ 11:55:12

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு பாசிக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். புதுச்சேரி மாநில அரசின் சார்பு நிறுவனமாக பாசிக் தட்டன்சாவடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள. இவர்களுக்கு சுமார் 60 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை, இதற்காக இவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள், இந்த நிலையில் தான் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பாசிக் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பணத்தை வழங்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் இன்றளவும் இவர்களுக்கு சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்காமல் இருப்பதை கண்டித்து பாசிக் ஊழியர்கள, சட்டமன்றத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தார்கள். சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டமன்றத்தின் உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதிக்க வில்லை, இதனால் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பாதுகாப்பு வளையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மாநில அரசான காங்கிரஸுக்கு எதிராக கோஷங்களை முழக்கமிட்டு வருகிறார்கள். 60 மாதங்களாக சம்பளம் வழங்காததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் , இந்த சூழ்நிலையில் தங்களால் எப்படி தீபாவளி பண்டிகையை நிம்மதியாய் கொண்டாட முடியும் என்று கூறி வருகினறனர்.
மேலும் செய்திகள்
பாலகோட் தாக்குதல், 370 சட்டப்பிரிவு உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய முடிவுகளை முன்கூட்டியே அறிந்திருந்த அர்னாப்: வாட்ஸ்அப் உரையாடலில் அம்பலம்
ஆந்திராவில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டு கோயில்களை திட்டமிட்டு சேதப்படுத்திய பாதிரியார்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
வருகிற 27ம் தேதி விடுதலை? சசிகலா ஆதரவு அதிகாரிகள் ரகசிய ஆலோசனை
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்