உலக ராணுவ போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்
2019-10-22@ 15:29:40

வூஹான்: உலக ராணுவ போட்டிகள் 2019-ல் பங்கேற்ற மாற்றுத்திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் 7-வது உலக ராணுவ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் நடைபெறும் மிக பெரிய விளையாட்டு போட்டியாக இது அமைந்து உள்ளது. ஏனெனில் 140 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் தடகள வீரர்கள் 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.
சீனாவில் நடைபெற்று வரும் போட்டியில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளார். பதக்கம் வெல்வது அவருக்கு புதியது அல்ல. கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.
மேலும் செய்திகள்
பிரித்வி ஷா இரட்டைச் சதம்
3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டி20 தொடரில் மீண்டும் ஆஸியை வீழ்த்திய நியூசி
3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.!!!
3வது டெஸ்ட் போட்டி: அக்சர், அஷ்வின் சுழலில் மூழ்கியது இங்கிலாந்து: இந்தியா நிதான ஆட்டம்
விஜய் ஹசாரே டிராபி: தமிழகம் மீண்டும் ஏமாற்றம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!