இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாத தலைவர்கள் தடையாக உள்ளனர்: ஆலிஸ் ஜி வெல்ஸ்
2019-10-22@ 12:54:37

வாஷிங்டன்: பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. அதனால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாத தலைவர்கள் தடையாக உள்ளனர் என அமெரிக்கா கூறி உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு பிரதான தடையாக உள்ளது என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் உதவி செயலாளர் ஆலிஸ் ஜி வெல்ஸ் கூறினார். சிம்லா ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவளித்தாலும், முக்கிய தடையானது பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகும் என குறிப்பிட்டார்.
1972-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி பேச்சுவார்த்தை பதற்றங்களைக் குறைப்பதற்கான அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இருதரப்பு உரையாடலை மறுதொடக்கம் செய்வதற்கு நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஒரு முயற்சி தேவைப்படுகிறது என தெரிவித்தர். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவும் பிரதான தடையாக உள்ளது என கூறினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு தகவல் தொடர்பு அல்லது பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் என்பது பாகிஸ்தான் தனது பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான மற்றும் நீடித்த நடவடிக்கைகளை எடுப்பதே என்று கூறினார்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவின் புதிய அதிபராகும் பிடென் ஆட்சி நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினர்: வெள்ளை மாளிகையில் 17 பேருக்கு முக்கிய பொறுப்பு
சீனா ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்: பீதியை கிளப்பும் புது தகவல்
அமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு
ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!
இந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்ச; நன்றி கூறிய பிரதமர் மோடி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்