உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரைத் திறன் கொண்ட கார் இங்கிலாந்தில் தயாரிப்பு
2019-10-22@ 10:37:00

இங்கிலாந்து: உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் காரினை பொறியியல் வல்லுநர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் ப்ளட்ஹவுன்ட் என்று பெயரிடப்பட்ட காரினைத் தற்போது தயாரித்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரைத் திறன் கொண்ட இந்தக் கார் மணிக்கு ஆயிரத்து 227 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளனர். இதற்காகவே இந்தக் காருக்கு டைபூன் என்ற போர் விமானத்தின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில் 44 அடி நீளமும் 9 அடி உயரமும் கொண்ட இந்தக் கார் ஏழாயிரத்து 500 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கார் புறப்படும் போது கிட்டத்தட்ட 3 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை வெளிவிடும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. மேலும் தரையில் இயக்கப்படும் வாகனங்களில் அதிவேகமானது என்ற பெயரை ப்ளட்ஹவுன்ட் பெற்று விடும் என அதனைத் தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர். தயாரிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது இந்தக் கார் ஆப்பிரிக்காவின் ஹக்ஸ்கீன்பன் பாலைவனத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் கார் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சீனா ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்: பீதியை கிளப்பும் புது தகவல்
அமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு
ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!
இந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்ச; நன்றி கூறிய பிரதமர் மோடி
அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது... திணறும் உலக நாடுகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்