அந்தமான் அருகே உள்ள நிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவு
2019-10-22@ 08:58:02

போர்ட்பிளேர்: அந்தமான் அருகே உள்ள நிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிக்கோபார் தீவில் இன்று காலை 6.36 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்து வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் , நிலநடுக்கம் தொடர்ந்ததாக தெரிவித்தனர். சில இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. பொருட்கள் மேல விழுந்ததில் சில பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால், பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர்.
இதனால் சுனாமி ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் தற்போது வரை இந்திய வானிலை மையம் சார்பில் அந்தமான் நிகோபார் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, சுனாமி குறித்து எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் உண்டானதா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்
இந்தியாவில் வழங்கப்படும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை
கருத்துக் கணிப்பு முடிவில் அதிர்ச்சி மோசமான 7 பாஜ முதல்வர்கள்: 19வது இடத்தில் எடப்பாடி பழனிசாமி
பீதியை கிளப்பும் ஒப்புதல் படிவம் கோவாக்சின் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒற்றுமை சிலைக்கு 8 புதிய ரயில்கள்: முழுவதும் கண்ணாடி மயம்
பிஎம் கேர்ஸ் நன்கொடை குளறுபடி ஓய்வு பெற்ற 100 ஐஏஎஸ், அதிகாரிகள் மோடிக்கு கடிதம்
நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டு திருத்தம்: கேரள உயர் நீதிமன்றம் அனுமதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்