நடுக்கடலில் மீனவர் மாயம்
2019-10-22@ 01:40:57

காசிமேடு: ராயபுரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கொண்டலு (31) தலைமையில் 7 பேர், கடந்த 19ம் தேதி, காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா அருகே நேற்று முன்தினம் இரவு இவர்கள் மீன் பிடித்துவிட்டு, படகில் தூங்கினர். நேற்று காலை மீனவர்கள் எழுந்து பார்த்தபோது, ஆந்திர மாநிலம், பிரகாசம் ஜில்லா, சீராள தாலுகாவை சேர்ந்த மஸ்தான் (50) என்பவர் படகில் இருந்து மாயமானது தெரிந்தது. இந்நிலையில், மற்ற மீனவர்கள் நேற்று காசிமேடு கடற்கரைக்கு திரும்பினர். பின்னர், இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்திய கடலோர காவல் படையினர், மஸ்தானை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர், தூங்கும் போது கடலில் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள் : நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பு
கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது : திருமாவளவன் வலியுறுத்தல்
‘‘நீங்க பேசுங்க... இல்லை.. நீங்க பேசுங்க..’’ ஓபிஎஸ், இபிஎஸ் பனிப்போர் பகிரங்கம்
தமிழுக்கு ரூ.22 கோடி.. சமஸ்கிருதத்துக்கு ரூ.643 கோடியா? : கே.எஸ்.அழகிரி காட்டம்!
“மார்கழி மழையால்” பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவித்திடுக : மு.க.ஸ்டாலின்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதற்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய் சேதுபதி!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்