டெல்டா மாவட்டங்களில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட பயனாளிகள் யார்?
2013-06-26@ 01:28:53

தஞ்சை: தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலர் சந்தீப் சக்சேனா பேசியதாவது: குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த விவசாய துறை மட்டுமின்றி மற்றும் இதர துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 5 மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களும், விவசாய இடுபொருட் களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் துறை அலுவலர்கள் மின் பகிர்வு சரியான முறையில் அளிக்க வேண்டும். டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்பட்டால் அதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.விவசாயிகளுக்கு 12 மணி நேரம் அளிக்கப்படும் மின்சாரத்தை பகலில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என பிரித்து கொடுக்க வேண்டும். மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை முன்கூட்டியே விவசாயிகளுக்கு நாளிதழ்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும். குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 100% மானிய விலையில் உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்டம், உயிர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஜிப்சம் விரைவில் வழங்கப்பட உள்ளது. நீர் இழப்பை குறைக்கும் வகையில் 20 ஆயிரம் மதிப்புள்ள 180 மீட்டர் நீளம், 90 மி.மீ. விட்டம் கொண்ட எச்டிபிஇ பைப்புகள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இத்திட்ட த்தை முறையாக உரிய பயனாளிகளுக்கு அலுவலர்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும். விவசாய நடவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளுக்கு வங்கி மூலம் குறுவை சாகுபடிக்கு தேவையான கடனுதவியை உடனடியாக வழங்க வேண்டும்.குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி பரப்புகளை விஏஓக்கள் தங்களுடைய அடங்கலில் விடுபாடின்றி பதிவு மேற்கொள்ள வேண்டும். இடுபொருட்கள் வழங்கும்போது அவற்றின் பயன் பாடுகள், உபயோகிக்கும் முறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகள், நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரம் ஆகிய இடுபொருட்கள் அடங்கிய இடுபொருள் பையில் வைத்து விவசாயிகளுக்கு விரைந்து வழங்கப்பட வேண்டும். பயிர்க்கடன், நகைக்கடன்களை விவசாயிகளுக்கு வங்கியாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டும். பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு விரைவில் சூரிய ஒளி பம்ப்செட்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.முதல்வர் இரண்டாம் பசுமைப்புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் அறிவித்த இத்திட்டங்களை வேளாண்துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு திட்டங்கள் முழுமையாக விவசாயிகளுக்கு சென்றடைய பாடுபட வேண்டும்.இவ்வாறு சந்தீப் சக்சேனா பேசினார்.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!