ரகசிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் கருப்பாக வெளியான முதல் பக்கம்
2019-10-22@ 00:31:32

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ரகசிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு பத்திரிகைகளின் முதல் பக்கம் நேற்று கருப்பாக வெளியிடப்பட்டது ஆஸ்திரேலியாவில், போர்க் குற்றங்கள், குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் பத்திரிகைகளில் சமீபத்தில் வெளியானது. இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அரசு தரப்பு கடும் கோபம் அடைந்தது. இதன் எதிரொலியாக, முக்கிய பத்திரிகை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு பத்திரிகைகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ‘பத்திரிகைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கும் அதேசமயத்தில் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்’ என்று அரசு கூறியது. இந்த பிரச்னை தொடர்ந்து சிறிது, சிறிதாக அரசுக்கும், பத்திரிகைகளுக்கும் இடையே பிரச்னையை பெரிதாக்கியது.
இதன் உச்சக்கட்டமாக, பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘ரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும் எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர்கள், நேற்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் தங்களது முதல் பக்கத்தை கருப்பாக வெளியிட்டன. இதற்கு டிவி மற்றும் ரேடியோ நிறுவனங்களும் ஆதரவு அளித்து செய்தி வெளியிட்டன. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறுகையில், “பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டதுதான். யாராக இருந்தாலும் சட்டத்துக்கு தலைவணங்கித்தான் ஆக வேண்டும்’’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
உலகத்தை மிரட்டி வரும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு
ஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்எக்ஸ்
அதிகார மோதலின் உச்சகட்டம் : ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கம்
தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்!: நாவல்னி கைது சர்ச்சையில் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை..!!
சீன தங்க சுரங்க விபத்து!: 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு..!!
இங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா...! ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்