பா.ஜ வேட்பாளரை கிண்டலடித்த ராகுல்: மிகவும் நேர்மையான மனிதர்’ என டிவிட்டரில் ‘பாராட்டு’
2019-10-22@ 00:13:50

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜ.வுக்கே ஓட்டு விழ வேண்டும் என்று கூறிய பாஜ வேட்பாளரை `மிகவும் நேர்மையான மனிதர்’ என ராகுல் காந்தி டிவிட்டரில் கிண்டலடித்துள்ளார். அரியானாவில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி நேற்றைய தனது டிவிட்டரில், ஞாயிற்றுக்கிழமை வெளியான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், பாஜ.வின் மிகவும் நேர்மையான மனிதர்’ என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கர்னால் மாவட்டத்தில் உள்ள ஆசாந்த் தொகுதியின் பாஜ எம்எல்ஏ. பக்ஷிஷ் சிங் வீர், தனது ஆதரவாளர்களிடம், `மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜ.வுக்கே ஓட்டு விழ வேண்டும். யார் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பது நமக்கு தெரிய வரும். இதில் எந்த தவறுக்கும் இடமில்லை’ என கூறியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அத்தொகுதி வாக்குப்பதிவை கண்காணிக்க சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், `இந்த வீடியோ போலியானது, தனக்கும் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி’ என்று எம்எல்ஏ மறுப்பு தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
டெல்லி எல்லையில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி விரட்டும் போலீஸ் : கண்ணீர் புகை குண்டு வீசி வருவதால் எல்லையில் பதற்றம்!
பிரதமர் மோடிக்கு தலைப்பாகை பரிசளிப்பு.. 'சாமியே சரணம் ஐயப்பா' கோஷம், மாமல்லபுரம் கடற்கரை கோவில்.. குடியரசு தின விழாவில் சிறப்புகள்!!
சசிகலா உடல்நிலை சீராக உள்ளது..! தொற்று நீங்கி நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள் நிறுவனம்!!
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு “பசுமை வரி” : மத்திய அரசு ஒப்புதல்
72-வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்... முதன்முறையாக வங்கதேச படையினர் அணிவகுப்பில் பங்கேற்பு!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்