முத்துப்பேட்டை 4வது வார்டில் குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி
2019-10-21@ 12:24:33

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை 4வது வார்டில் குண்டும், குழியுமான சாலைகளால் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியின் 4-வது வார்டு முத்துப்பேட்டை நகரில் முக்கிய பகுதியாகும். இங்கு உள்ள சாலைகள் அனைத்தும் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. அதனால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் முக்கிய சாலையாக கருதப்படும் யூனியன் ஆபீஸ்சாலை, புதுக்காளியம்மன் கோயில் தெருசாலை, டாக்டர் மீரா உசேன் சாலை, திருமணமண்டபம் சாலை ஆகிய நான்கு சாலைகளுக்கும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும்,குழியுமாக நாசமாகி உள்ளது.
இதில் யூனியன் ஆபிஸ் சாலையில் ஒன்றிய அலுவலகம், வேளாண்மைதுறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், ரயில்வே நிலையம் மற்றும் ஓட்டல் உட்பட ஏராளமான கடைகள், குடியிருப்புகள் இவ்வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் அனைத்து தரப்பு மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் டாக்டர் மீரா உசேன் சாலையில் இரண்டு தனியார் மருத்துவமனைகள், ஏராளமான கடைகள், குடியிருப்புகள் ஆகியவை உள்ளது. இவ்வழியாகவும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் அனைத்து தரப்பு மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் புதுக்காளியம்மன் கோயில் தெரு சாலையில் பிரசித்தி பெற்ற புதுக்காளியம்மன் கோயில் உள்ளது. இதில் தினந்தோறும் நடைபெறும் வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். அதே போல் இப்பகுதியில் ஏராளமான ஓட்டல் உட்பட ஏராளமான கடைகள், குடியிருப்புகள் ஆகியவை உள்ளது.
இவ்வழியாகவும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் அனைத்து தரப்பு மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் திருமண மண்டபம் சாலையிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. நான்கு சாலைகளுக்கு ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதால் இப்பகுதி முழுவதும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாதது போல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த சாலைகள் முழுவதும் உள்ள குழிகளில் மழைநீர்தேங்கியும் மழைநீருடன் சேறு மற்றும் கழிவுநீர்இரண்டொரு கலந்து சேறும் சகதியுமாக உள்ளது.
இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவி வருகிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. அதே போல் பல ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான பலனுமில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் இப்பகுதி மக்கள் நலன் கருதி சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
சாலைமேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்
தமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்
மதுரையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி ‘க்யூ.ஆர் கோடை’ ஸ்கேன் செய்தால் மொய் பணம் அக்கவுன்ட்டில் ஏறும்
புதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்
கன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை சாவு
வேலூர் அருகே எருது விடும் விழா காளைகள் முட்டியதில் எஸ்ஐ, போலீஸ் உட்பட 21 பேர் படுகாயம்: பார்வையாளர்கள் மீது போலீஸ் தடியடி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்