சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு அஞ்சலி
2019-10-21@ 09:40:41

சென்னை: காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு 21-ம் தேதி ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜி.பி. ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். வீரமரணம் அடைந்த காவலர்கள் ஸ்ரீராமலு, நடராஜன், கோபால், காவலர் கிருஷ்ணன், எட்வர்டு, தனசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பெரிய பாண்டியன் உள்ளிட்டோரின் குடும்பத்தினரும் முதல் முறையாக அஞ்சலி செலுத்தினார்கள். ஆவடி வசந்தம் நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் வீட்டுக்கு சென்ற கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
மேலும் செய்திகள்
பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது..! கழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்தாண்டு பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்...! மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள்: அமைச்சர் செங்கோட்டையன்
ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? : தமிழக அரசு மீது கமல்ஹாசன் தாக்கு!!
72-வது குடியரசு தினம்..! சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: சிறப்பு விருதுகளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி
கோவை மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்த முதல்வருக்கு திமுக வலியுறுத்தல்
அகில இந்திய குடிமைப்பணி நுழைவுத்தேர்வு முடிவுகள் 27ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்