SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் ரிசல்ட் இலைக்கு நெகடிவ்வாக இருக்கும்னு உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-10-20@ 01:52:59

‘‘என்ன இடைத்தேர்தல் பிரசாரம் எல்லாம் எப்டி முடிந்தது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ பிரசாரத்தில் பிரச்னையில்லை... மற்றபடி அமைச்சர்களின் பேட்டிகள் கூட சும்மா இருந்த மக்களை கூட இலைக்கு எதிராக திருப்பிவிட்டதாக அக்கட்சியின் தலைவர்களே பேசிக் கொள்கின்றனர். அதற்கு ஒரு படி மேலே போய்... 7 பேர் விடுதலை விவகாரம் இலைக்கு இன்னும் நெருக்கடியை உருவாக்கியிருக்கு.. அது தேர்தலில் சில ஆயிரம் வாக்குகளை வேறு பக்கம் மாற்றும் என்று சொல்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அவ்வளவுதானா...

‘‘நாங்குநேரியில் பிரசாரம் ஒருவழியாக ஓய்ந்து விட்டது. ஆனால் ஆளுங்கட்சியினர்தான் கலக்கத்தில் இருக்காங்க. இடைத்தேர்தலில் கிப்ட் கட்சி போட்டியில்லை என்பதால் முதலில் உற்சாகத்தில் இருந்த அதிமுகவினர் தற்போது துவண்டு போய் இருக்கின்றனர். ஏற்கனவே கூட்டணியில் இருந்த ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் ேதவேந்திரகுல வேளாளர் அரசாணையை வலியுறுத்தி கூட்டணியில் இருந்து கழன்று கொண்டதுடன் கொடிகளை பயன்படுத்தவும் கிராமங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மூலைக்கரைப்பட்டிக்கு சென்ற அமைச்சரை பொதுமக்களே தடுத்து நிறுத்தி எழுப்பிய கேள்விக்கு பதில் கூட தெரிவிக்க முடியாமல் அவர் வெட்கி விரைத்துப் போய் விட்டார். இது தவிர பல கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு, கருப்புக் கொடி என எழுந்த எதிர்ப்புகள் அதிமுகவினருக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இது மட்டுமல்லாது தொகுதி முழுவதும் சுற்றி வலம் வந்த உளவுத் துறையினரும், நிலவரம் கலவரமாகத் தான் உள்ளது என ரிப்போர்ட் கொடுத்துள்ளனராம். அதிமுகவினர் மானப் பிரச்னையாக கருதும் நாங்குநேரி இடைத்தேர்தல் மானம் காக்குமா என உறைந்து போய் கிடக்கின்றனர். பணம் பாய்ந்தும்... முக்கியஸ்தர்களை மடக்கியும் உளவுத்துறை ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்ததால் இலை தரப்பு கடைசி நாளில் அப்செட்டில் இருப்பதாக... நாங்குநேரியில் இருந்து வரும் தகவல்கள் சொல்கிறது...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசு வக்கீலுடன் நிபந்தனை ஜாமீனுக்காக கையெழுத்துபோட கெத்தாக வரும் நபரை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி சிட்டியில் பிட்காயின் மோசடியில் ஈடுபட்ட சென்னை ஆசாமியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் ஜாமீனும் வாங்கி விட்டார். இதையடுத்து தினமும் சம்மந்தப்பட்ட போலீஸ் ஆபீசுக்கு கையெழுத்து போட வருகிறாராம்.

ஆனால், அவரிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தக் கூடாது என்பது இன்ஸ்ெபக்டரின் மறைமுக உத்தரவாக உள்ளதாம். அதுக்கும் காரணம் இருக்காம். பார்ட்டி தினமும் அரசு வக்கீலுடன் தான், ஆஜராக வருகிறாராம். இப்படி கெத்தாக வருபவரிடம் மோசடி ெதாடர்பான கேள்விகள் எதையாவது போலீசார் கேட்டால், ‘‘நீங்க எங்கிட்ட பேசுவதற்கு எந்த ரைட்சும் இல்லை. எதுவா இருந்தாலும் வக்கீல் கிட்ட பேசுங்க’’ என்கிறாராம். அதுசரி, அரசு வக்கீலே இந்த பார்ட்டியை அணைத்தபடி கூட்டிக்கிட்டு வரும் ேபாது, போலீஸ் என்னதான் ெசய்ய முடியும்? என்ற கேள்வியோடு முடிக்கிறார்கள் சில காக்கிகள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வா மாவட்ட கதையில் ஒன்றை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியின் ஆண்டு விழாவை முன்னிட்டு இரட்டையரான தலைவர்கள் சென்னையில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். ஆனால் அமைச்சர்கள் இடைத்தேர்தல் பணியில் இருந்ததால் அந்தந்த ஊர்களில் மாலை அணிவிப்புக்கு ஏற்பாடு செய்தனர். நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்காக வந்ததில் 8 அமைச்சர்கள் நெல்லை கொக்கிரகுளத்தில் எம்ஜிஆர் சிலைக்கு காலை 10 மணிக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் 10.30 மணிக்கு மேல்தான் மாலை அணிவிக்க வந்தனர். 8 அமைச்சர்கள் மாலை அணிவிக்க வந்ததால் அவருடன் வந்த எம்எல்ஏக்கள், ஆதரவாளர்கள் என 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடை சூழ்ந்தது. இந்த வாகனங்கள் அனைத்தும் எம்ஜிஆர் சிலையை ஒட்டிய கலெக்டர் அலுவலக சாலையிலும், நெல்லை சந்திப்பு செல்லும் சாலையில் ஆற்றுப்பாலத்திற்கு முன்பாகவும் நிறுத்தப்பட்டன.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்த நேரம் பார்த்து அலுவலகத்திற்கு வந்த பெண் கலெக்டரின் வாகனம் வண்ணாரபேட்டையை கூட தாண்ட முடியவில்லை. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நெடுநேரம் அணிவகுத்ததால் நெரிசலில் சிக்கிய கலெக்டர் வேறு வழியின்றி அப்படியே ‘யூ டர்ன்’’ அடித்து மீண்டும் பங்களாவுக்கே திரும்பி விட்டார்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கலெக்டருக்கே அல்வா கொடுத்துடாங்கனு சொல்லுங்க... வேற என்ன ேமட்டர் இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பியிருக்கும் சூழலில், ஆங்காங்கே உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஆனா, இந்த டெங்கு உயிரிழப்பு அனைத்தையும், மறைத்திட மருத்துவமனை நிர்வாகங்களுக்கும், சுகாதார பணிகள் துணை இயக்குநர்களுக்கும் வாய் மொழி உத்தரவை துறை விஐபி பிறப்பித்திருக்காராம்.

இதனால, மாங்கனி மாவட்ட தலைமை மருத்துவமனையில் டெங்குக்கு இறக்கும் நபர்களின் உடலை உறவினர்களிடம் அதிகாலை வேளையில், காதும் காதும் வைச்ச மாதிரி ஒப்படைத்து, 10 மணிக்குள்ள அடக்கம் செய்திட வேண்டும்னு உத்தரவிட்டு வாராங்களாம். கடந்த ஒரு வாரத்தில் காய்ச்சல் பாதிப்பால், 5 பேர் உயிரிழந்த நிலையில், அதில் எதுவுமே டெங்கு இல்லைன்னு அடித்து சொல்கிறாராம் மருத்துவமனையின் அதிகாரி. ஆனால், தன்னிடம் நெருக்கமாக இருக்கும் மருத்துவர்களிடம், டெங்கு உயிரிழப்பு ஏற்பட்டால், அதை பற்றி வாய் திறக்கக் கூடாதுனு மேலிடத்தில் இருந்து சொல்லிட்டாங்க... அதனால், நீங்களும் எச்சரிக்கையா இருங்க... எதையும் மீடியாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்கனு கூறி வருகிறாராம். இதையே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பின்பற்றி வாராங்க. துறை விஐபி உத்தரவு போட்டா மீற முடியுமானும் ஓப்பனா பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்