தென்னிந்திய தற்காப்பு கலை போட்டி விவேகானந்தா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்தென்னிந்திய தற்காப்பு கலை போட்டி: விவேகானந்தா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
2019-10-20@ 00:09:19

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வினா யோகா பயிற்சி மையம், டி.ஜெ.எஸ் கல்விக் குழுமம், இந்திய நியூ மாங்க்ஸ் குங்க்பூ பயிற்சி மையம், இந்திய பாரம்பரிய கராத்தே கோபுடோ அமைப்பு, ஜெய்ஹிந்த் சிலம்பக்கூடம் இணைந்து தென்னிந்திய அளவிலான 2வது தற்காப்பு கலை, யோகா போட்டிகளை கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் நடத்தின. போட்டிகளை டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.
தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் அதிக போட்டிகளில் வென்ற கும்மிடிப்பூண்டி துராப்பள்ளம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. யோகா போட்டியில், சாம்பியன் ஆப் தி சாம்பியன் பட்டத்தை டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சூரஜ்குமார் குன்டு, பெண்களுக்கான பிரிவில் காஞ்சிபுரத்தை சேர்ந்த லோகவர்ஷினி கைப்பற்றினர். தவிர குங்க்பூவில் தேவா தர்மா, சுகன் ஆகியோர் சாம்பியன் ஆப் தி சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மேலும் செய்திகள்
சுந்தர் - தாகூர் ஜோடி அபார ஆட்டம் முதல் இன்னிங்சில் இந்தியா 336 ரன் குவிப்பு: 5 விக்கெட் வீழ்த்தினார் ஹேசல்வுட்
சில்லி பாயின்ட்...
சில்லி பாயின்ட்...
ஆஸ்திரேலியா 369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன் குவிப்பு: பந்துவீச்சில் நடராஜன் அசத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்