SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளி வசூலில் கொடிகட்டி பறக்கும் பெண் அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-10-19@ 00:26:17

‘‘அமமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கிய பதவிகள் கொடுத்தது பிரச்னையை உண்டு பண்ணியிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அக்கட்சி தலைமை அறிவித்தது. அதில் கட்சி நிர்வாக ரீதியாக ஒன்றியங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக ஒன்றிய செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அமமுகவில் இருந்து அதிமுகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேர்ந்த நிர்வாகிகளுக்கு எம்ஜிஆர் மன்றத்திலும், இளைஞர் அணியிலும் இணை செயலாளர்களாக பதவி அளித்துள்ளனர். மேலும் முக்கிய பொறுப்புகளிலும் நியமனம் செய்துள்ளனர். இதை பார்த்து உண்மையான அதிமுகவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
 பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு மரியாதை கிடையாது. அணி மாறி பல கட்சிகளுக்கு போய் வந்தவர்களுக்கு அதிமுகவில் இப்போது பதவி வீட்டிற்கு தேடிப்போய் கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் மாவட்ட செயலாளர்தான் என்று அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அதிமுகவினர் உள்ளூர் அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் முழுக்க முழுக்க இது மாவட்ட செயலாளர் அளித்த பரிந்துரையின் பேரிலேயே கட்சி தலைமை அறிவித்துள்ளது. எனவே கட்சி தலைமையிடம் புகார் அளிக்க வண்டியை ஏற்பாடு செய்து 100க்கும் மேற்பட்டவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்துக்கு இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. விரைவில் கட்சிக்குள் கலகம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுகவினரே பரபரப்பாக பேசி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘தீபாவளி வசூலில் பேயாட்டம் போடுகிறார்களாமே பெண் அதிகாரிகள்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
  ‘கோவை மாநகராட்சியில், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, சென்ட்ரல் என ஐந்து மண்டல அலுவலகங்கள் உள்ளன. இங்கு, பணிபுரியும் அலுவலர்களுக்கு இடையே தீபாவளி வசூல் தொடர்பாக கடும் போட்டி நிலவுகிறது. மேற்கு மண்டல உதவி வருவாய் அலுவலரான பெண் அதிகாரி ஒருவர் ஏற்கனவே ஒரு பிரச்னையில் சிக்கி, வெளிவர முடியாமல் தவிக்கிறார். ஆனாலும், அவரது கலெக்‌ஷன் பணி தொடர்கிறது. அதே அலுவலர் மீது மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இவர், மண்டல உதவி ஆணையர் மற்றும் நிர்வாக அலுவலர் பேச்சை கேட்பது இல்லையாம். பணிகளில் ஓவர் லுக் செய்து விடுகிறாராம். இவரது நடவடிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பதாகவும் தகவல். இங்குள்ள ஊழியர் ஒருவர், கலெக்‌ஷன் பட்டியலை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளதால், அவர்கள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல். மத்திய மண்டல அலுவலகத்தில் ஒரு பெண் அதிகாரி வசூலில் டாப்பில் உள்ளார். இவர், யாரையும் மதிப்பதில்லை. ஏற்கனவே இந்த பெண் அதிகாரி இரண்டு மண்டலங்களில் பணிபுரிந்து, பல்வேறு சர்ச்சையில் சிக்கி, தற்போது மத்திய மண்டலத்திற்கு வந்துள்ளார். வருவாய் வரும் கோப்புகளை தவிர, வேறு எந்த கோப்புகள் மீதும் கைவைப்பதில்லையாம். தினமும் ஆபீசுக்கு வந்தவுடன், இன்றைய பென்டிங் வேலை என்ன இருக்கு... என கேட்பதில்லை. மாறாக, சாப்பிட நல்ல ஓட்டல் ஏதாச்சும் சொல்லுங்கப்பா... என விசாரிக்க துவங்கிவிடுகிறார். கிழக்கு மண்டலமும் விதிவிலக்கு அல்ல. அங்கும், ஒரு பெண் அதிகாரியின் தர்பார் தொடர்கிறது. வழக்கமாகவே தர்பார் நீடிக்கும், ஆனால், தற்போது தீபாவளி காற்று வீசுவதால் தர்பார் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் இங்குள்ள ஊழியர்கள்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘தொடர் பூஜைகள் செய்து அசத்துகிறாராமே ஓபிஎஸ்..’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘ஆமா..தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், ஏற்கனவே ஒற்றை மனிதராக ‘ஜெயலலிதா நினைவிடத்தில்’ தியானத்தில் களமிறங்கியது எல்லோருக்குமே தெரியும். இப்போதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக மதுரையிலிருந்து காரில் கிளம்பிச் சென்றவர், செல்லும் வழியெங்கும் கோயில்களின் ஒரு பட்டியலையே கையில் வைத்துக் கொண்டு அங்கெல்லாம் தனி ஆளாக இறங்கி, ‘சிறப்பு பூஜை’ செய்துவிட்டு பயணம் தொடர்ந்தாராம். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
துணை முதல்வரின் பட்டியலில் மிகச் சாதாரண கோயில்களே இடம்பிடித்திருந்ததாம். வண்டியை நிறுத்தி, ஏற்கனவே வாங்கி வைத்திருக்கிற பொருட்களுடன், பூசாரியை அழைத்து பூஜை நடத்த வைத்து வேண்டுதல் முடித்து, அடுத்தடுத்து பயணித்திருக்கிறார். மதுரை, விருதுநகர், நெல்லை என மூன்று மாவட்டத்தின் குறிப்பிட்ட கோயில்களை தரிசித்ததில், விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் அருகாமை பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயில் பூஜையில் கூடுதல் நேரம் செலவழித்தாராம்.
சமீபத்தில் ஜோதிடர் ஒருவர், அரசியலில் ஆளுமைபெற இவ்வகை தொடர் பூஜை செய்திட அறிவுறுத்தினாராம். அதன்படியே ஓபிஎஸ்சும் பூஜையை முடித்திருக்கிறாராம். அதேநேரம் கட்சியினருக்கெல்லாம் தகவல் தராமல், திடீரென வழிப்பயணத்தில் எதிர்ப்படுபவைகளில் குறிப்பிட்ட கோயில்களை குறிவைத்து தனித்துச் சென்று ‘சிறப்பு பூஜை’யில் ஈடுபட்டதில் ‘வேறு ஏதும் விஷயம்’ இருக்கலாம் என்றும் கட்சியினர்கள் சந்தேகம் கிளப்புகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்