SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முரசொலி இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் : ஸ்டாலின் டீவீட்

2019-10-18@ 12:20:28

சென்னை : தற்போது முரசொலி இருக்கும் இடம் பஞ்சமி நிலமே அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளர். வழி வழியாக தனியாருக்கு சொந்தமாக பாத்தியப்பட்ட பட்டா மனை என பட்டா நகலுடன் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு, 'மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது  “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! .அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட
பட்டா- மனை!. நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!.அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால்,  அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?' என்றுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்