SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போர்ஷேவோடு இணைந்து, பறக்கும் மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் போயிங்

2019-10-17@ 14:13:50

ஃபோக்ஸ்வேகனின் போர்ஷேவோடு இணைந்து, பறக்கும் மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போயிங் அறிவித்துள்ளது. வியாழனன்று அமெரிக்க விமான உற்பத்தி றிறுவனமான போயிங் வெளியிட்ட அறிவிப்பில் ஃபோக்ஸ்வேகனின் ஸ்போர்ட்ஸ் ரக காரான போர்ஷெவோடு இணைந்து மின்சாரத்தால் இயங்குவதோடு பறக்கவும் திறன்கொண்ட காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஜனநெருக்கடி அதிகமுள்ள மெட்ரோ நகரங்களுக்கு ஏற்ப வடிவமைப்பதாகவும் கூறியுள்ளது. தானாகவே செங்குத்தாகப் புறப்பட்டு பறந்து தரையிறங்கும் கார்களுக்கான வடிவமைப்பில் ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போயிங்கும் ஒரு போட்டியாளராக உள்ளது.

தானியங்கி பயணிகள் வாகனத்தில் ஃபோக்ஸ்வேகனின் ஆடியுடன் இணைந்து ஏர்பஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் பறக்கவும், சாலையில் இயங்கவும் கூடிய காரின் முன்மாதிரியை காட்சிப்படுத்திவிட்டது. டீசல் புகை வெளியேற்ற ஊழலால் ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகனும், கோர விபத்துக்களில் சிக்கிய 737 மேக்ஸ் விமானங்கள் இரண்டால் அமெரிக்காவின் போயிங்கும் தற்போது தங்களது நிறுவனத்தின் நன்மதிப்பை மீட்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில், ஃபோக்ஸ்வேகனின் போர்ஷெவுடனான பறக்கும் மின்சார கார் அறிவிப்பை போயிங் வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்