SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்கி ஆசிரமத்தில் 2ம் நாளாக நடைபெற்று வரும் வருமான வரிசோதனை: ரூ.33 கோடி பணம், ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல்!

2019-10-17@ 12:12:34

சென்னை: கல்கி ஆசிரமத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் வருமான வரிசோதனையில் ரூ.33 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியில் ரூ.24 கோடி இந்தியப்பணம் என்றும் ரூ.9 கோடி அமெரிக்க டாலர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆத்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் கல்கி ஆசிரம அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் வருதையர்பாளையத்தில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் கல்கி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு, பக்தர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடை மற்றும் பல்வேறு அறக்கட்டளை மூலமாக பெறக்கூடிய தொகைகளை வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகவும் ஆப்பிரிக்காவின் கென்யா பகுதியில் முதலீடு செய்து பல தொழிற்சாலைகளை நடத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்தது.

புகாரைகளை அடுத்து நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆபிரிக்க நாடுகளில் சொத்து வாங்கியதற்கான ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது நாளாக நடைபெற்று வரும் இந்த சோதனையில், சுமார் 13 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதவிர ஆசிரமத்திற்கு 4 மாநிலங்களில் சொந்தமாக உள்ள 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை கல்கி ஆசிரமத்திற்கு பக்தர்கள் கொடுத்த நன்கொடையில் ரியல் எஸ்டேட் தொழில் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கி என்ற விஜயகுமாரின் மகன் கிருஷ்ணன், ரியல் எஸ்டேட் தொழிலை கவனித்து வந்துள்ளார்.

சென்னை அருகே ஆந்திராவில் உள்ள தடா மற்றும் வேலூரில் 1,000 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. விஜயகுமார் நாயுடுவின் மகன் கிருஷ்ணா, அவரது மனைவி, ஆசிரமத்தின் சிஇஓ லோகேஷ் ஆகியோரை தனித்தனி அறையில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் குச்சிநாடு, வருதையர்பாளையம், நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டை, தடா ஆகிய இடங்களில் ஆசிரமத்தின் சார்பில் வாங்கப்பட்ட நிலங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, ரூ.33 கோடி பணம் தவிர பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்கி ஆசிரமத்தில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்:

கல்கி ஆசிரமத்தில் வருமானவரி சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வாங்கப்பட்ட சொத்து பட்டியலையும் வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது. தங்கக்கோயில், தங்கமனை, வண்ணம், ஏகம் என்ற போலிப் பெயர்களில் கல்கி ஆசிரமம் சொத்து குவித்துள்ளது. இதுதவிர பல்வேறு பெயர்களில் புதிதாக பல்வேறு தொழில்களை ஆரம்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கல்கி ஆசிரமத்தின் பணப்பரிவர்த்தனை பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்