சில்லி பாயின்ட்...
2019-10-17@ 00:23:38

* ‘எல்லோரையும் போலவே நானும் சாதாரணமாவன் தான். ஆனால், எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் சிறப்பாக செயல்படுகிறேன்’ என்று இந்திய அணி நட்சத்திரம் எம்.எஸ்.டோனி கூறியுள்ளார்.
* டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை சயாகா டாகஹாஷியுடன் நேற்று மோதிய இந்திய நட்சத்திரம் சாய்னா நெஹ்வால் 15-21, 21-23 என்ற நேர் செட்களில் போராடி தோற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 21-11, 21-11 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கன்டா சுனியாமாவை எளிதாக வீழ்த்தினார்.
* இந்திய அணி பகல்/இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்துவோம் என்று கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
* சுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் நேற்று மோதிய இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
* பிரபல லீக் கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரருக்கான தங்கக் காலணி விருதை பார்சிலோனா அணியின் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) தொடர்ந்து 3வது சீசனாக வென்றுள்ளார்.
* புரோ கபடி லீக் தொடரின் முதல் அரை இறுதியில் தபாங் டெல்லி கே.சி. அணி 44-38 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
மேலும் செய்திகள்
படிக்கல் 101 - கோஹ்லி 72 ரன் குவித்து அதிரடி ராயல்சை நொறுக்கியது ஆர்சிபி
போர்ஷே கிராண்ட் பிரீ டென்னிஸ் காலிறுதியில் பிளிஸ்கோவா: ஆஷ்லி முன்னேற்றம்
வங்கதேசம் ரன் குவிப்பு
ஹாட்ரிக் தோல்வியால் நெருக்கடி மும்பையை வீழ்த்தி முன்னேறுமா பஞ்சாப்
ராஜஸ்தானுடன் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் கோஹ்லி படை..!
பஞ்சாப்பை வீழ்த்தியது சன் ரைசர்ஸ்; பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் வார்னர் பாராட்டு..!
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!