கோயில் நிலம் மீட்பு
2019-10-15@ 00:15:47

தண்டையார்பேட்டை: சென்னை பூங்கா நகர், ராசப்ப செட்டி தெருவில், முத்துக்குமார சுவாமி கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலின் ராஜகோபுரம் கீழ்புறம், மேற்கு பகுதியில், கோகிலா என்பவர் வாடகைதாரராக இருந்தார். கோயில் பயன்பாட்டிற்கு அந்த இடம் தேவைப்பட்டதால், வாடகைத்தாரரை காலி செய்யுமாறு அறநிலையத்துறை அறிவுறுத்தியது. ஆனால், வாடகைதாரர் காலி செய்யவில்லை. இதுகுறித்து, கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 30ம் தேதி அறநிலையத்துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பேரில், நேற்று மாலை, அறநிலையத்துறை உதவி ஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், பூக்கடை போலீசார் பாதுகாப்புடன், கோயிலுக்கு சொந்தமான 133. 65 சதுர அடி இடத்தை மீட்டு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
ஆதாரங்களுடன் ரூ.50,000 மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம்: ஆதாரமில்லாததை ஆணையம் பறிமுதல் செய்யலாம்...ஐகோர்ட் உத்தரவு.!!!
ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? : டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!!
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது : தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்!!
மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்...! வைகோ வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா!: சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்து..!!
அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்...! உயர்கல்வித் துறை உத்தரவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்