அசத்தும் வாட்ச்
2019-10-14@ 15:01:00

நன்றி குங்குமம் முத்தாரம்
‘‘இதற்கு முன் இப்படியான ஒரு வாட்ச்சை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்...’’ என்ற வாக்கியம் மின்னுகிறது ஆப்பிளின் பிரத்யேக இணையதளத்தில். ஆம்; ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் வாட்ச்சான ‘சீரிஸ் 5’-க்குத்தான் இந்த விளம்பரம். கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது இந்த வாட்ச். ரெட்டினா டிஸ்ப்ளே நம்மை வெகுவாக ஈர்க்கிறது. ஸ்மார்ட் வாட்ச்சின் ஒரு பக்கம் டைம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதில் நீங்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் நேரத்தைக் காட்டிக்கொண்டே இருக்கும். உங்களுக்கு விருப்பமான ஸ்டிராப்களை மாற்றிக்கொள்ளும் வசதியிருப்பதால் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஸ்டிராப்பை மாற்றும் போது வாட்ச்சின் வடிவமும் புதிதாக மாறுகிறது. இது தினம் தினம் புது வாட்ச்சை கட்டும் அனுபவத்தை உங்களுக்குத் தருகிறது. இதிலிருக்கும் இசிஜி ஆப் எல்லா நேரமும் உங்களின் இதயத்தைக் கவனித்துக் கொண்டே இருக்கிறது.
ஏதோ ஒரு பிரச்னையென்றால் உடனே அலர்ட் கொடுக்கிறது. நீங்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது இரைச்சல் அதிகமாக இருந்தால் அதை உங்களுக்குத் தெரிவிக்க இரைச்சல் ஆப் இருக்கிறது. இது உங்களின் செவித்திறனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. பெண்களுக்கு என்று பிரத்யேகமாக மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கிறதா என்பதைக் காட்டும் ஆப் ஒன்றும் இதிலுள்ளது. அத்துடன் உங்களின் ஃபிட்னஸ் இலக்கை அடைய அனைத்து வகையிலும் இது வழிகாட்டியாக உறுதுணையாக இருக்கிறது. ஆப்பிள் மியூசிக் லைப்ரரியில் இருக்கும் கோடிக்கணக்கான பாடல்களை இதில் கேட்கலாம். தண்ணீர் புகாத பாதுகாப்பு, அழகான வடிவமைப்பு, கையில் இருக்கும் உணர்வே இல்லாத அளவுக்கு இதன் எடை என அசத்துகிறது சீரிஸ் 5. விலை ரூ.40,900-லிருந்து ஆரம்பிக்கிறது.
மேலும் செய்திகள்
விவோ ஒய்12எஸ் (விலை சுமார் ரூ.9,990)
கார்மின் விவோ ஆக்டிவ் (விலை சுமார் ரூ.3,999)
எல்ஜி ஏர்பட்ஸ் விலை சுமார் ரூ/24,990 முதல்
சாம்சங் ஏர் டிரெஸ்ஸர் (விலை சுமார் ரூ.1.10 லட்சம்)
தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவந்தது வாட்ஸ் ஆப்..!!
அதிக திறன் கொண்ட இன்டல் சிபியுக்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!