கணவனுடன் சேர்த்து வைக்க கோரி காவல் நிலையத்தில் பெண் தர்ணா
2019-10-14@ 00:22:19

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் அடுத்த எழில் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணி (30). இவரது மனைவி ரேவதி (28). இவர்கள், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு தியா (5) என்ற குழந்தை உள்ளது. ரேவதியை பார்க்க அவரது தோழி மோனிஷா என்பவர், அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, மணிக்கும், மோனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இது ரேவதிக்கு பிடிக்காததால், மோனிஷாவை இனிமேல் எனது வீட்டிற்கு வரகூடாது என கண்டித்துள்ளார். இந்நிலையில், கணவர் மணி கடந்த ஒரு வருடமாக சரிவர வீட்டிற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி விசாரித்தபோது, மணி, மோனிஷாவுடன் தனியாக குடும்பம் நடத்துவது தெரிந்துள்ளது. இதுபற்றி, கணவரிடம் கேட்டபோது, “எனக்கும், மோனிஷாவுக்கும் திருமணம் நடந்துவிட்டது. நீ, வீட்டை விட்டு வெளியேறு. நாங்கள் இருவரும் அங்கு வந்து வசிக்கப் போகிறோம்” என கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ரேவதி இதுகுறித்து கிண்டி மகளிர் காவல் நிலையம் மற்றும் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நல சங்க தலைவர் லிங்கபெருமாள் தலைமையில் ரேவதி மற்றும் அவரது குடும்பத்தினர், கண்ணகி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசார் நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன், எனக்கூறி காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன தயாரிப்புகளை மதுரை மீனாட்சி அம்மன் உள்பட கோயில்களில் பயன்படுத்த ஒப்பந்தம்
குடியரசு தின சிறப்பு சலுகை: ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவிப்பு
பொன்னுசாமி மறைவு முத்தரசன் இரங்கல்
பொங்கல் விழாவில் தமிழிசை பங்கேற்பு
எம்.வேலுத்தேவர் மறைவிற்கு கே.எஸ்.அழகிரி இரங்கல்
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே விசைப்படகு கட்டும் தளத்தில் திடீர் தீ
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்