மறைந்த கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம்: வாடிகனில் அறிவித்தார் போப்
2019-10-14@ 00:21:35

வாடிகன் சிட்டி: மறைந்த கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா உள்பட 5 பேரை, புனிதராக போப் பிரான்சிஸ் நேற்று அறிவித்தார். கேரள மாநிலம், திருச்சூரில் கடந்த 1914ம் ஆண்டு ‘சிஸ்டர்ஸ் ஆப் ஹோலி பேபிலி’ என்ற அமைப்பை உருவாக்கியவர் மரியம் திரேசியா. இவர் கேரளாவில் பள்ளிகள், விடுதிகள், அனாதை இல்லங்கள் கட்டி கல்வி மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டார். ஏழைகளுக்கு உதவினார். நோய் வாய்ப்பட்டவர்களை கவனித்தார். அவரிடம் பல அற்புத சக்திகளும் இருந்துள்ளது. பலரது நோய்களை குணப்படுத்தி உள்ளார். இவர் கடந்த 1926ம் ஆண்டு தனது 50 வயதில் இறந்தார். இவரை ஆசிர்வதிக்கப்பட்டவராக கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய போப் 2ம் ஜான்பால் அறிவித்தார். சமூக சேவையில் அற்புதங்கள் நிகழ்த்தியவர்களுக்கு போப், புனிதர் பட்டம் வழங்குவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு புனிதர் பட்டத்துக்கு கேரளாவைச் சேர்ந்த மரியம் திரேசியா, இங்கிலாந்து கார்டினல் ஜான் ஹென்றி நியூமேன், சுவிஸ் கன்னியாஸ்திரி மார்கேரெட் பேஸ், பிரேசில் கன்னியாஸ்திரி டுல்சே லோப்ஸ், இத்தாலி கன்னியாஸ்திரி கிசெப்பினா வன்னினி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவர்களை வாடிகன் நகரில் உள்ள செயின் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் புனிதர்களாக போப் பிரான்சிஸ் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தலைமையிலான இந்திய குழுவினரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவருடன் சேர்த்து கேரளாவின் சைரோ-மலபார் தேவாலயத்தை சேர்ந்த 4 பேர் புனிதர் பட்டம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகள்
ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மோடிக்கு போரிஸ் அழைப்பு
ஆப்கானில் தாக்குதல் 2 பெண் நீதிபதி சுட்டுக் கொலை: தலிபான்கள் கைவரிசை
சபரிமலையில் 20ம்தேதி நடை அடைப்பு: நாளை இரவு வரை பக்தர்களுக்கு அனுமதி
மின் கம்பி உரசியதால் தீப்பிடித்து எரிந்த பஸ்: 6 பேர் கருகி பலி, 30 பேர் காயம்
டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடக்கும்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையை விட ஒற்றுமை சிலையை அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர்: பிரதமர் மோடி பெருமிதம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்