காந்தி பிறந்த மண்ணில் இப்படியும் பரிதாபம் காந்தி எப்படி தற்கொலை செய்தார்? பள்ளி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி
2019-10-14@ 00:21:04

அகமதாபாத்: குஜராத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேர்வில், ‘‘மகாத்மா காந்தியடிகள் எப்படி தற்கொலை செய்து கொண்டார்?’’ என்று கேட்கப்பட்டிருந்த கேள்வியால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.குஜராத்தின் காந்திநகரில் அரசு உதவி பெறும் சுபலம் ஷாலா விகாஸ் சங்குல் என்ற அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்மதிப்பீட்டு தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் 9ம் வகுப்பு மாணவர்களின் கேள்வித்தாளில், ‘‘காந்தியடிகள் எப்படி தற்கொலை செய்துக் கொண்டார்?'' என்று கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் கடும் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதுதவிர 12ம் வகுப்பு மாணவர்களின் கேள்வித்தாளில், ‘‘உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவது பற்றியும், சட்டவிரோதமாக மது உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தொல்லைகள் குறித்தும் மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு புகார் அனுப்புதல்'' என ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது. குஜராத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் கல்வி அதிகாரிகளும், மாநில உயர் அதிகாரிகளுக்கும் தெரிந்தவுடன் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காந்தி நகரின் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட பள்ளியின் கேள்வித்தாள் மிக ஆட்சேபகரமானவை. இது அவர்களாகவே தயாரித்த கேள்வித்தாள். இதற்கும் கல்வித்துறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் எவ்வாறு இந்த கேள்விகள் எல்லாம் தயாரிக்கப்பட்டன என்பது குறித்து தெரியவரும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
ம.பியில் 2 முறை கடத்தி கொடூரம் 13 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த கும்பல்: 7 பேர் கைது
பாலகோட் தாக்குதல், 370 சட்டப்பிரிவு உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய முடிவுகளை முன்கூட்டியே அறிந்திருந்த அர்னாப்: வாட்ஸ்அப் உரையாடலில் அம்பலம்
ஆந்திராவில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டு கோயில்களை திட்டமிட்டு சேதப்படுத்திய பாதிரியார்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
வருகிற 27ம் தேதி விடுதலை? சசிகலா ஆதரவு அதிகாரிகள் ரகசிய ஆலோசனை
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்