மே.வங்கத்தில் 2021 தேர்தலுக்கு தயாராகும் பாஜ: திறமையானவர்களை தேர்வு செய்ய குழு
2019-10-14@ 00:21:01

கொல்கத்தா: ‘`மேற்கு வங்கத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை எதிர்கொள்ள திறமையானவர்களை தேர்வு செய்வதற்கான குழு விரைவில் அமைக்கப்படும்,’' என்று இம்மாநில பாஜ தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜ கைப்பற்றியது. இது ஆளும் திரிணாமுல் பெற்றதை விட 4 தொகுதிகள் மட்டுமே குறைவு. அதிலும், கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜ 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதுடன் ஒப்பிடுகையில், பாஜ அங்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் 2021ம் ஆண்டில் இம்மாநிலத்தில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், தற்போதே பாஜ அங்கு மும்முரமாக களம் இறங்கி உள்ளது.
இது தொடர்பாக மாநில பாஜ தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது:ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 4 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் பாஜ அமைப்பு தலைவர்களாவோ அல்லது வரும் 2021 தேர்தல் வேட்பாளர்களாகவோ தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டுகளில் ஆற்றிய கட்சி பணி, பின்புலம் குறித்த ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள், வேறு கட்சியில் இருந்து இணையும் புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.
மேலும் செய்திகள்
டெல்லி எல்லையில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி விரட்டும் போலீஸ் : கண்ணீர் புகை குண்டு வீசி வருவதால் எல்லையில் பதற்றம்!
பிரதமர் மோடிக்கு தலைப்பாகை பரிசளிப்பு.. 'சாமியே சரணம் ஐயப்பா' கோஷம், மாமல்லபுரம் கடற்கரை கோவில்.. குடியரசு தின விழாவில் சிறப்புகள்!!
சசிகலா உடல்நிலை சீராக உள்ளது..! தொற்று நீங்கி நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள் நிறுவனம்!!
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு “பசுமை வரி” : மத்திய அரசு ஒப்புதல்
72-வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்... முதன்முறையாக வங்கதேச படையினர் அணிவகுப்பில் பங்கேற்பு!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்