கை, கால் நரம்புகளை அறுத்து கொண்டு கர்நாடகா போலீஸ் டிஎஸ்பி தற்கொலை முயற்சி
2019-10-14@ 00:20:43

மைசூரு: கர்நாடகாவில் போலீஸ் டிஎஸ்பி ஒருவர் கை, கால் நரம்புகளை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கபட்டிணா காவல்நிலையத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் யோகானந்த். இவர் பாபுராயனகொப்பலில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், நேற்று காலை போலீஸ் குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் கை மற்றும் கால்களின் நரம்புகளை அறுத்து கொண்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஸ்ரீரங்கப்பட்டிணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக மைசூரு நாராயண ஹிருதாலயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஸ்ரீரங்கபட்டிணா காவல் நிலையத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் யோகானந்த், சமீபத்தில் குடும்ப பிரச்னையால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாவட்ட எஸ்பி பரசுராம் உள்ளிட்ட உயரதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று யோகானந்த் உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர், மாவட்ட எஸ்பி பரசுராம் கூறுகையில், ‘‘யோகானந்த் உடல்நலம் சரியில்லாததால் கடந்த 5 நாட்களாக விடுமுறையில் இருந்தார். மேலும், 5 நாட்கள் விடுமுறை வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில், கை, கால் நரம்புகளை அறுத்து கொண்டு தற்ெகாலைக்கு முயன்றுள்ளார். தற்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்த பின்னர் முழு தகவல் பெறப்படும்’’ என்றார். போலீஸ் டிஎஸ்பி தற்கொலைக்கு முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
வருகிற 27ம் தேதி விடுதலை? சசிகலா ஆதரவு அதிகாரிகள் ரகசிய ஆலோசனை
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்