பொருளாதார மந்த நிலையை சினிமா வசூல் உடன் ஒப்பிட்டு கருத்து: எதிர்ப்பு எழுந்ததால் கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்
2019-10-13@ 16:23:24

டெல்லி: நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதை 3 திரைப்படங்களின் ஒரு நாள் வருமானம் உறுதிப்படுத்தியிருப்பதாக தான் கூறியதை திரும்ப பெறுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மஹாராஸ்டிர தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பொருளாதார சரிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தேசிய விடுமுறைதினமான அக்டோபர் 2ம் தேதி, வார், சைரா, ஜோக்கர் ஆகிய 3 திரைப்படங்கள் இந்தியில் வெளியாகின. இந்த 3 திரைப்படங்களும் ஒரே நாளில் 120 கோடிரூபாய் வசூல் செய்துள்ளது என்று திரைவிமர்சகர் கோமல் மேத்தா கூறியிருந்தார்.
3 திரைப்படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் வசூலாகியிருப்பதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் இது நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கு சான்று என்றும் தெரிவித்தார். இந்த பதில் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடுவதாவது; குறித்து இன்று ள , தனது கருத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மும்பையில் பேசிய 3 திரைப்படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் செய்தது செய்தி தரவுகளின் அடிப்படையில் உண்மையானவை.
லட்சகணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்துவரும், வரிகளின் மூலம் நாட்டிற்கு பங்களிப்புகளை அளித்து வரும், நமது திரைத்துறை மீது மிகவும் பெருமிதம் கொள்கிறோம். என குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். பிரதமர் மோடி அரசு, சாதாரண மக்களின் உணர்வுகளின் மீது எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. அதே நேரத்தில் வேறு விதமாக விமர்சனங்கள் எழுவதால் தமது கருத்தை திரும்ப பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
பாலகோட் தாக்குதல், 370 சட்டப்பிரிவு உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய முடிவுகளை முன்கூட்டியே அறிந்திருந்த அர்னாப்: வாட்ஸ்அப் உரையாடலில் அம்பலம்
ஆந்திராவில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டு கோயில்களை திட்டமிட்டு சேதப்படுத்திய பாதிரியார்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
வருகிற 27ம் தேதி விடுதலை? சசிகலா ஆதரவு அதிகாரிகள் ரகசிய ஆலோசனை
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்