வீடு இல்லாதோர் தினத்தையொட்டி காப்பக ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு பயிற்சி
2019-10-12@ 03:35:24

சென்னை: உலக வீடு இல்லாதோர் தினத்தை முன்னிட்டு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படும் காப்பக ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. நகர்புறத்தில் தெரு மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் தங்குவதற்காக காப்பகங்களை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் அனைத்து பெருநகரங்கள் மற்றும் நகர்புறங்களில் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ₹107 கோடி மதிப்பீட்டில் 242 காப்பகங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில், 149 காப்பகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 93 காப்பகங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் மாவட்ட மற்றும் வட்டார தலைமை மருத்துவமனைகள் உள்ள இடங்களில் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கான 89 காப்பகங்களும் அடங்கும். சென்னை மாநகராட்சி சார்பில் 38 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் தேதி உலக வீடு இல்லாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள வீடற்றவர்களுக்கான காப்பகங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பயிற்சி முகாம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி கல்வித்துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வீடற்றவர்களுக்கான காப்பகங்களை பார்வையிட்டனர்.
மேலும் செய்திகள்
அமித்ஷா கையில் தலையாட்டி பொம்மை: ப.சிதம்பரம் கிண்டல் ட்வீட்
தொடரும் இழுபறி!: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை..!!
பாலியல் சர்ச்சை விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு உதவிய உயர் அதிகாரிகள்: முதல் தகவல் அறிக்கையில் அம்பலம்
சட்டமன்ற தேர்தல் 2021!: அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல்...ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவிப்பு..!!
3 மாதங்களில் 225 உயர்வு: காஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் பாய்ந்தது வழக்கு: விசாரணை அதிகாரியாக எஸ்பி. முத்தரசி நியமனம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்