விஜய் ஹசாரே டிராபி: கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் வெற்றி
2019-10-11@ 01:32:04

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பைக்கு எதிராக ஆடிய கர்நாடகா அணியும், ம.பி.,க்கு எதிராக ஆடிய ஜம்முகாஷ்மீர் அணியும் வெற்றி பெற்றது. விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பெங்களூருவில் நேற்று நடந்த போட்டியில் கர்நாடகா அணியும், மும்பை அணியும் மோதியது. முதலில் ஆடிய கர்நாடகா அணி 50 ஓவரில் 312 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்கவீரர் தேவ்டூட் படிக்கல் 79 ரன்னும், கேப்டன் மனீஷ்பாண்டே 62 ரன்னும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் சிவம் டியூப் மட்டும் அதிரடியாக ஆடினார். அவர், 118 ரன் குவித்தார். 50 ஓவர் முடிவில் 303 ரன்னுக்கு மும்பை ஆல்அவுட் ஆனது. இதனால், கர்நாடகா அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மத்தியபிரதேசம்-ஜம்முகாஷ்மீர் அணிகள் மோதிய போட்டியில், 4 விக்கெட் வித்யாசத்தில் ஜம்முகாஷ்மீர் அணி வெற்றி பெற்றது. இதேபோல், சட்டீஸ்கர்-ஜார்கண்ட் அணிகள் மோதிய போட்டியில் சட்டீஸ்கர் அணியும், பெங்கால்-பீகார் அணிகள் மோதிய போட்டியில் 9 விக்கெட் வித்யாசத்தில் பெங்கால் அணியும் வெற்றி பெற்றது. பெங்கால் அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் 112 ரன் குவித்தார். டெல்லி-ஒடிஷா அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணியும், இமாச்சலபிரதேசம்-அரியானா போட்டியில் இமாசலபிரதேச அணியும், அருணாசலபிதேசம்-புதுச்சேரி அணிகள் மோதிய போட்டியில் புதுச்சேரியும், அசாம்-சிக்கிம் போட்டியில் அசாம் அணியும், ஆந்திரா-ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ஐதராபாத் அணியும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி நாளை (12ம் தேதி), மத்திய பிரதேச அணியுடன் மோதவுள்ளது. இதுவரை விளையாடிய அனைத்து போட்டியிலும் (7 போட்டி) தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி
இலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு
சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை
திருவில்லிபுத்தூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்