சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் திபெத்தியர் வருகை கண்காணிப்பு தீவிரம்:ரயில்வே போலீசார், ஆர்பிஎப் வீரர்கள் சோதனை
2019-10-10@ 00:17:05

சென்னை: சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களில் திபெத்தியர்கள் வருகை குறித்து கண்காணிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.சீன அதிபர் வரும் 11ம் தேதி பிற்பகல் சென்னை வருகிறார். சீன அதிபர் வருகையின் போது திபெத்திய விடுதலை போராளிகள் மற்றும் திபெத்திய மாணவர்கள் சீன அதிபர் செல்லும் பாதையில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு தாம்பரம் பகுதியில் சீன அதிபருக்கு கருப்புக்கொடி காட்ட இருந்த பெண் உட்பட 8 திபெத் மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், விழுப்புரம் மாவட்டம் கோட்டாக்குப்பத்தில் பதுங்கி இருந்த திபெத் நாட்டை சேர்ந்த நபரை கோட்டக்குப்பம் போலீசார் கைது ெசய்தனர். அதேப்போன்று சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்கள் மற்றும் புறநகர் ரயில்நிலையங்களில் திபெத்தியர்கள் மற்றும் சந்தேகப்படும் படியாக யாரேனும் வருகிறார்களா என்றும், புறநகர் ரயில்கள் மூலம் செங்கல்பட்டு, கிண்டி, தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களுக்கு திபெத்தியர்கள் யாரும் வருகிறார்களா என்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகம் முழுவதும் 6,156 பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் மேலும் 589 பேருக்கு கொரோனா
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலங்கானா ஆளுநர் வேண்டுகோள்
8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
எந்தவித கண்காணிப்போ,கட்டுப்பாடோ இல்லாமல் அரங்கேறும் அசிங்கங்கள் சமூக வலைதளமா... ஆபாச களமா? கடுமையான தண்டனைகளுடன் சட்டம் கொண்டு வருமா மத்திய அரசு
யூடியூப் சேனல்கள் எல்லைமீறி செயல்படுகின்றன: எஸ்.பிரபாகரன்,மூத்த வக்கீல், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்