உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி முகாம்
2019-10-10@ 00:09:54

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக முதல்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
பொதுமக்கள் தங்களது பெயர் எந்த வாக்குச்சாவடியில் என்ற தகவலை www.tnsec.tn.nic.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் இன்று சென்னையில் நடக்கிறது. கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் முகாமில் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த 4 முதல் 5 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் செய்திகள்
சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்கு அலைகின்றனர்: புகழேந்தி குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சி அமைக்குமா என இப்போது கூறமுடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ராமதாஸ்: பாலகிருஷ்ணன் பேச்சு
பா.ஜனதாவில் சேர முடிவு புதுச்சேரி அமைச்சர்-எம்.எல்.ஏ ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்
சொல்லிட்டாங்க...
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்