காரைக்குடி அருகே துணிகரம் அஞ்சல் அதிகாரி வீட்டை உடைத்து 170 பவுன் நகைகள் கொள்ளை
2019-10-07@ 00:48:24

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா காதி நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (62). ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அதிகாரி. இவரது மனைவி காணிக்கை மேரி. 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். 10 நாட்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் உள்ள மூத்த மகன் வீட்டுக்கு, மனைவியுடன் சென்ற ஜெயராஜ், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 170 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்படி காரைக்குடி தெற்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாம்பு புகுந்ததால் பூட்டிய வீட்டில் 60 பவுன் கொள்ளை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மரியசெல்வம்(52). உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை. கணவர் இறந்துவிட்டார். மகள் சுற்றுலா சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் மாலை அவரது வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டது. இதனால் அச்சத்தில் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்துக்கு வீட்டில் தூங்க சென்றுள்ளார். நேற்று காலை வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பீரோவை உடைத்து 60பவுன் நகைகள், சம்பளபணம் 45 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. புகாரின்படி மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தைத் தேரோட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலமாக வந்த மணமக்கள்
அவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்
அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: திருப்பூர் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் தவிப்பு-வழிப்பறி சம்பவங்களால் அச்சம், பீதி
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!