டிக்டாக் நடிகைக்கு பாஜவில் சீட்; அரியானாவில் ருசிகரம்
2019-10-04@ 17:41:52

சண்டிகர்: அரியானாவில் பா.ஜ கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக் டாக் நடிகைக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அரியானாவை சேர்ந்தவர் சோனாலி பொகத். சினிமா மற்றும் சில டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இந்திப் பாடல்கள் மட்டுமல்லாமல் பல மொழிப் பாடல்களுக்கும் இவர் டிக்டாக் செய்துள்ளார். கவர்ச்சியும் இடையிடையே விளையாடுகிறது. இவரை டிக்டாக்கில் ஏகப்பட்ட ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.
இவர்கள்தான் சோனாலியை தேர்தலில் நிற்குமாறு உசுப்பி விட்டனர். பிரபலங்களை உடனே பயன்படுத்திக்கொள்ளும் யுக்தியை கையிலெடுத்துள்ள பாஜ உடனடியாக சோனாலிக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்கி உள்ளது. பாஜக சார்பில் ஹரியானாவில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார் சோனாலி. வரும் 21ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ள சோனாலி, இப்போதும் டிக் டாக் செய்வதை நிறுத்தவில்லை.
மேலும் செய்திகள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த சிறிய ரக ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
டெல்லியில் 144வது நாளாக போராட்டம் : வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என விவசாயிகள் திட்டவட்டம்
1 கிலோ தக்காளி வேணுமா ? அப்ப கொரோனா தடுப்பூசி போடுங்க... மூக்குத்தி, சோப்பு, ஜூஸ்-ஐ தொடர்ந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள்!!
கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு
கொரோனா சிகிச்சைக்கு தேவையான கூடுதல் மருந்துகளும் தடுப்பூசிகளும் வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு மம்தா வேண்டுகோள்!!
நாட்டில் 2-வது அலை கொரோனா பரவல் தீவிரம்: தடுப்பூசி தட்டுப்பாட்டால் அல்லல்படும் இந்தியா
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்