ஹவ்டி மோடி நிகழ்ச்சியை புகழ்ந்த மிலிந்த் தியோரா மீது சோனியா அதிருப்தி
2019-09-25@ 00:28:08

புதுடெல்லி: காங்கிரஸ் நிர்வாகி மிலிந்த் தியோராவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளது காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மும்பை மாநகர தலைவராக இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் மிலிந்த் தியோரா. இவர் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான முரளி தியோராவின் மகன். பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஹூஸ்டன் நகரில் கடந்த 22ம் தேதி நடந்த 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்ற ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அதிபர் டிரம்புடன் இணைந்து பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, அமெரிக்காவின் அடுத்த தேர்தலிலும் அதிபர் டிரம்ப் வெற்றி வாகை சூடுவார் என பேசினார். இந்திய பிரதமராக அமெரிக்கா சென்றுள்ள மோடி, டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், இந்திய வெளியுறவுக் கொள்கையையே சிதைத்துவிட்டார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மிலிந்த் தியோரா பிரதமர் மோடியின் ஹவ்டி மோடி நிகழ்ச்சியை புகழ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘எனது தந்தை முரளி தியோரா இந்திய பிரதமர்கள் மற்றும் அமெரிக்க அதிபர்களுடன் இணைந்து பணியாற்றியவர். பிரதமர் மோடியின் அமெரிக்க உரை ராஜதந்திர நடவடிக்கை’ என கூறியுள்ளார்.
தன்னை பாராட்டி கருத்து தெரிவித்த மிலிந்த் தியோராவுக்கு மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தியோராவின் இந்த செயல்பாடு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் செய்திகள்
நகர உள்ளாட்சி ஊழியர்களுக்கும் ஜோதி சஞ்சீவினி திட்டம் விஸ்திரிக்க வேண்டும்: அமைச்சர் ஆலோசனை
ஒசகோட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சரத் பச்சேகவுடா காங்கிரசில் ஐக்கியம்?
மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்கள் போலீஸ் கேன்டீனில் வழங்கப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
வீட்டு தோட்டம் அமைக்கும் பயிற்சி
கொரோனா விழிப்புணர்வுக்கு பதில் தடுப்பூசியை பிரபலப்படுத்த புது காலர் டியூன்
அரசை ஆதரித்தவர்களிடம் எப்படி பேச முடியும்? வேளாண் சட்ட நிபுணர் குழு உறுப்பினர்களை மாற்றுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்